உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்ட கவுன்சிலரின் கணவர் கைது

Published On 2024-04-02 06:10 GMT   |   Update On 2024-04-02 06:10 GMT
  • விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளாவிடம் பொன்னுச்சாமி புகார் அளித்தார்.
  • ராஜ்குமாரை கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எத்திலோடு ஊராட்சி மன்ற அலுவலகம் எத்திலோடு கிராமத்தில் உள்ளது. இந்த ஊராட்சியின் 6-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கருத்தாண்டி பட்டியைச் சேர்ந்த ஷகிலா.

இவரது கணவர் ராஜ்குமார் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஊராட்சி செயலாளர் பொன்னுச்சாமியை வெளியே வரும்படி கூறினார். அவர் எதற்காக தன்னை வெளியே வரச்சொல்கிறீர்கள் என கேட்டதற்கு தான் ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட போகிறேன் என்றார்.

இதற்கு பொன்னுச்சாமி, ராஜகுமாரிடம் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் என கூறினார். இருந்தபோதும் ராஜ்குமார் ஊராட்சி செயலாளரை அலுவலகத்தை விட்டு வெளியே வரச் சொல்லி அனுப்பிவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பூட்டினார்.

இது குறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளாவிடம் பொன்னுச்சாமி புகார் அளித்தார். அதன்பேரில் ராஜ்குமாரை கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News