தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகிகள் திடீர் கைது
- பிரதமருக்கு காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தெரிவித்திருந்தார்.
- தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் முரளிதரனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வரும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அறிவித்திருந்தார். அதன்படி இன்று பிரதமருக்கு காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் முரளிதரனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இதையறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.
அப்போது திரண்ட மண்டல தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, மாவட்ட செயலாளர் கோபால், மாவட்டத் துணைத் தலைவர்கள், விஜயராஜ், ஜெயஜோதி, மாவட்ட பொதுச்செயலாளர் சாந்திமேரி, இளைஞர் காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் ராகுல், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, மாவட்ட மீனவர்கள் பிரிவு தலைவர் மைக்கில், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பேரையா, அமைப்பு சாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர் ஆகியோரையும் போலீசார் கைது செய்து தூத்துக்குடி தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.