உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் குழந்தைக்கு கையில் எலும்பு முறிவு- போலீசில் புகார்

Published On 2023-07-15 05:06 GMT   |   Update On 2023-07-15 05:06 GMT
  • ஜெயஸ்ரீக்கு சுகபிரசவகத்தில் பெண்குழந்தை பிறந்து உள்ளதாக அங்கிருந்த நர்சுகள் துரையிடம் கூறினர்.
  • குழந்தையை உடனடியாக பார்க்க முடியாது அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

செங்கல்பட்டு:

செய்யூர் அடுத்த கொடூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. தற்போது ஜெயஸ்ரீ மீண்டும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் பவுஞ்சூரில் உள்ள ஆரம்ப அரசு சுகாதார நிலையத்தில் பரிசோதித்த போது குழந்தையின் எடை அதிகமாக உள்ளது உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அங்கிருந்த டாக்டர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இதையடுத்து ஜெயஸ்ரீயை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து முதல் குழுந்தை அறுவை சிகிச்சை இன்றி பிறந்ததால் தற்போதும் ஜெயஸ்ரீக்கு சுகபிரசவம் ஆக முயற்சி செய்தனர்.

இந்த நிலையில் ஜெயஸ்ரீக்கு சுகபிரசவகத்தில் பெண்குழந்தை பிறந்து உள்ளதாக அங்கிருந்த நர்சுகள் துரையிடம் கூறினர். மேலும் குழந்தையை உடனடியாக பார்க்க முடியாது அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

நீண்ட நேரத்திற்கு பின்னர் குழந்தையை துரை பார்த்தபோது குழந்தையின் தலையில் ரத்த கசிவும், வலது கை எலும்பு முறிந்து கட்டுபோடப்பட்டும், இடது கை நரம்பு பாதித்து அசைவற்றும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஜெயஸ்ரீக்கு உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்க்காததே குழந்தையின் பாதிப்புக்கு காரணம் என்று டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுதொடர்பாக துரை செங்கல்பட்டு நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரசவத்தில் குழந்தையின் கை எலும்பு முறிந்து பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News