உள்ளூர் செய்திகள்

அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில் பலாப்பழத்தை தேடி வரும் யானை கூட்டம்

Published On 2023-05-09 12:00 IST   |   Update On 2023-05-09 12:00:00 IST
  • வனப்பகுதியில் இருந்து வந்த யானை பலாப்பழத்தை அங்கேயே பறித்து உண்டு ருசித்து சென்றது.
  • மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் எப்போது தங்கள் குடியிருப்புக்குள் யானை வந்துவிடுமோ என்ற ஒரு வித அச்சத்தோடு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தியூர்:

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இதில் 33 குக்கிராமங்கள் உள்ளன இந்த வன பகுதிகளில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் அந்த வாசனைக்காக வனப்பகுதியொட்டி உள்ள தோட்டங்களில் உள்ள பலாமரங்களில் பலாப்பழங்களை ருசிப்பதற்காக யானைகள் வந்து பலத்தை ருசித்து செல்கிறது.

இந்த நிலையில் பர்கூரை அடுத்த துருசன்னம்பாளையம் பகுதியில் மாது என்பவரது தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் பலாப்பழங்கள் பழுத்து தொங்கிக்கொண்டு இருந்தன. இதனை ருசிப்பதற்காக வனப்பகுதியில் இருந்து வந்த யானை பலாப்பழத்தை அங்கேயே பறித்து உண்டு ருசித்து சென்றது.

அப்போது யானை மிகுந்த சத்தத்தோடு பிழிய படி சென்றது. இதனால் மாது மற்றும் குடும்பத்தார்யானையை துரத்த முயற்சித்தனர். அது அங்கிருந்து சென்று விட்டது இதனால் பர்கூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் எப்போது தங்கள் குடியிருப்புக்குள் யானை வந்துவிடுமோ என்ற ஒரு வித அச்சத்தோடு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Similar News