அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் விஜய் வசந்த் எம்.பி.
- பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
- கன்னியாகுமரி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக அழகப்பபுரம் பேரூராட்சிக்குட்பட்ட தெற்கு பகவதிபுரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர், கோரிக்கை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டில் இருந்து ரூ12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அந்த பணி முடிவடைந்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கே.டி. உதயம் வட்டார தலைவர் கால பெருமாள், பேரூராட்சி தலைவி அனிற்றா ஆண்ட்ரூஸ், துணைத் தலைவர் ஆன்றோ ஆண்ட்ரூஸ், திட்டக்குழு உறுப்பினர் ஆதிலிங்கபெருமாள், கன்னியாகுமரி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.