உள்ளூர் செய்திகள்
அம்பத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்- சிறுமி உள்பட 2 பேர் மீட்பு
- திருநெல்வேலியை சேர்ந்த ரமேஷ், திருச்செந்தூரை சேர்ந்த லிங்கம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- மீட்கப்பட்ட பெண்கள் இருவரும் மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அம்பத்தூர் ஓ.டி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சோதனை செய்தபோது ஒரு வீட்டில் விபசாரம் நடப்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த 17 வயது சிறுமி மற்றும் இளம்பெண் ஒருவரை மீட்டனர். மேலும் திருநெல்வேலியை சேர்ந்த ரமேஷ், திருச்செந்தூரை சேர்ந்த லிங்கம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட பெண்கள் இருவரும் மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.