உள்ளூர் செய்திகள்

விருதுநகரில் விபசாரம் நடத்திய அ.தி.மு.க. பெண் நிர்வாகி கணவருடன் கைது- கார் பறிமுதல்

Published On 2023-01-30 14:52 IST   |   Update On 2023-01-30 14:52:00 IST
  • அமல்ராணி மற்றும் அவரது கணவர் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கருப்பசாமி நகரில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
  • விபசார வழக்கில் அ.தி.மு.க. பெண் நிர்வாகி கணவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர்:

விருதுநகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக பாண்டியன் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கருப்பசாமி நகர் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள வீட்டில் விபசாரம் நடந்தது தெரியவந்தது. அங்கிருந்த 30 வயதுடைய பெண்ணை போலீசார் மீட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் விபசாரம் செய்தது பாத்திமாநகரை சேர்ந்த சந்திரசேகரன் (வயது42), அவரது மனைவி அமல்ராணி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விபசாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அமல்ராணி மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி துணைத்தலைவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமல்ராணி மற்றும் அவரது கணவர் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கருப்பசாமி நகரில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

விபசார வழக்கில் அ.தி.மு.க. பெண் நிர்வாகி கணவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News