உள்ளூர் செய்திகள்

சேலம் இரும்பாலையில் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

Published On 2023-08-16 11:36 IST   |   Update On 2023-08-16 11:36:00 IST
  • மாணவன் கோகுல்காந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
  • மாணவன் தற்கொலை குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்:

சேலம் இரும்பாலை மாரமங்கலத்துப்பட்டி அருகே உள்ள கீரபாப்பம் பாடி பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி வனிதா. இவர்களது மகன் கோகுல்காந்தி (14). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கோகுல் காந்தி தனது தாய் வனிதா மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார்.

மாணவர் கோகுல்காந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று கோகுல்காந்தியின் தாய் வனிதாவுக்கு பிறந்த நாள் ஆகும்.

இதையடுத்து கோகுல்காந்தி தனது தாய்க்கு சேலை வாங்கி கொடுத்து கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் கோகுல் காந்தி வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது தனது பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருவதை நினைத்து மாணவர் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

அப்போது கழுத்தில் இருந்த துண்டு அறுந்து விழுந்தார். அப்போது சத்தம் கேட்டு அவரது தாய் வனிதா சென்று பார்த்தார். அப்போது தூக்கில் இருந்து கோகுல்காந்தி கீழே விழுந்தது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வனிதா தனது மகன் கோகுல்காந்தியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் கோகுல்காந்தி இறந்து விட்டார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News