உள்ளூர் செய்திகள்

திருப்புவனம் அருகே வீட்டின் சுவற்றில் பஸ் மோதியது- 8 பயணிகள் காயம்

Published On 2022-12-27 16:08 IST   |   Update On 2022-12-27 16:08:00 IST
  • திருப்புவனத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தினசரி இரு முறை 44 டவுன் பஸ்கள் மூலம் மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.
  • பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து இரவு இடைக்காட்டூர் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது.

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரில் நிலைதடுமாறிய பஸ் வீட்டின் சுவற்றில் மோதியதில் 8 பேர் காயமடைந்தனர்.

அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்டம் சார்பில் திருப்புவனத்தில் கிளை பணிமனை இயங்கி வருகிறது. திருப்புவனத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தினசரி இரு முறை 44 டவுன் பஸ்கள் மூலம் மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.

பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து இரவு இடைக்காட்டூர் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. உசிலம்பட்டி காசிமாயன் (41) பஸ்சை ஓட்டினார். திருப்புவனத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீதமுள்ள 15 பயணிகளுடன் கிளம்பிய பஸ், புதூரில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வீட்டின் சுவற்றில் மோதி நின்றது.

இந்த விபத்தில் பஸ் பயணிகள் 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். மேலும் இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News