சானமாவு அருகே ஊருக்குள் புகுந்த 50 காட்டுயானைகள்- பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
- கிராமங்களுக்குள் புகுந்து இரவு நேரங்கில் அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
- காட்டுயானைகளை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கர்நாடகாவில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் இடம்பெயர்ந்துள்ளது. இதனால் அந்த காட்டுயானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஓசூர் அருகேயுள்ள சானமாவு வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் உள்ளது. இந்த வனப்பகுதியையொட்டி கிராமங்களுக்குள் புகுந்து இரவு நேரங்கில் அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
கிராமத்திற்குள் மீண்டும் புகுந்து நேற்று காட்டுயானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தியுள்ளது. பின்னர் கிராமத்திற்குள் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்ததால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அந்த காட்டுயானைகளை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.