உள்ளூர் செய்திகள்

5 நாள் முகாம்: கவர்னர் வருகையையொட்டி கோவை, நீலகிரியில் பலத்த பாதுகாப்பு

Published On 2022-06-05 07:34 GMT   |   Update On 2022-06-05 09:51 GMT
  • கவர்னர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் மற்றும் அவர் கார் மூலம் நீலகிரி செல்லும் சாலை, ஊட்டி ராஜ்பவன், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
  • அங்கு கவர்னர் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஊட்டி:

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 5 நாள் பயணமாக இன்று ஊட்டிக்கு வருகிறார்.

சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் புறப்படும் கவர்னர், மதியம் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். இங்கிருந்து கார் மூலம் அவர் மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக மாலையில் ஊட்டி சென்றடைகிறார். ஊட்டியில் ராஜ்பவன் மாளிகையில் அவர் தங்குகிறார்.

வருகிற 9-ந் தேதி வரை அவர் ஊட்டியில் தங்கியிருக்கிறார். அங்கு அவர் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏற்கனவே கடந்த மாதம் ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சி நிறைவு விழாவில் கவர்னர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

இந்தநிலையில் அவர் ஊட்டிக்கு இன்று வருகை தர உள்ளார். 9-ந் தேதி காலை ஊட்டியில் இருந்து கோவை வந்து விமானம் மூலம் சென்னை செல்ல அவர் திட்டமிட்டு இருக்கிறார்.

கவர்னர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் மற்றும் அவர் கார் மூலம் நீலகிரி செல்லும் சாலை, ஊட்டி ராஜ்பவன், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News