உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2023-11-29 06:29 GMT   |   Update On 2023-11-29 06:29 GMT
  • தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
  • விரைவில் அவர்களை பிணையில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகசரம்பட்டி போலீசார் நேற்று இரவு 11 மணியளவில் நாகரசம்பட்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அதில் வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை நாகரசம்பட்டி போலீஸ் நிலையம் கொண்டு சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வீட்டில் தனியாக உள்ள பெண்கள் மற்றும் பூட்டி கிடக்கும் வீடுகள் ஆகியவற்றை குறி வைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் அவர்கள் கிருஷ்ணகிரி, நாகரசம்பட்டி, பாரூர், கல்லாவி, பொம்மிடி, மத்தூர், தருமபுரி ஆகிய பகுதிகளில் கைவரிசையை காட்டியுள்ளனர். இதனை தவிரவும் அவர்களுக்கு வேறு பல சம்பவங்களில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிக்கிய கொள்ளையர்களான செல்லம்பட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் தண்டபாணி (22) போச்சம்பள்ளியை சேர்ந்த கண்ணப்பன் மகன் விநாயகப்பிரியன்(24) நாகரசம்பட்டி கக்கன்கா லணியை சேர்ந்த சுமன்(32) மேச்சேரியை சேர்ந்த பழனியப்பன் மகன் சுரேஷ்(45) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தருமபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விரைவில் அவர்களை பிணையில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News