உள்ளூர் செய்திகள்
சென்னை பறக்கும் ரெயிலில் அபாய சங்கிலியை இழுத்து ரகளை- கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
- கல்லூரி மாணவர்கள் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
- சுமார் அரை மணி நேரம் வரை ரெயில் நிறுத்தப்பட்டு அதன் பிறகு புறப்பட்டு சென்று உள்ளது.
சென்னை:
வேளச்சேரியில் இருந்து பறக்கும் ரெயிலில் பயணம் செய்த மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சேப்பாக்கம் ரெயில் நிலையம் முதல் கடற்கரை ரெயில் நிலையம் வரை ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
இதில், சுமார் அரை மணி நேரம் வரை ரெயில் நிறுத்தப்பட்டு அதன் பிறகு புறப்பட்டு சென்று உள்ளது. இது தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மாநில கல்லூரி மாணவர்கள் 3 பேரை கைது செய்தனர்.