உள்ளூர் செய்திகள்

ஆரணி ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்க உத்தரவு

Published On 2022-11-12 13:05 IST   |   Update On 2022-11-12 13:05:00 IST
  • பொன்னேரி பகுதியில் ஆரணி ஆற்றின் கரையில் கடந்த ஆண்டு கனமழையினால் உடைப்பு ஏற்பட்டது.
  • கரை உடைப்பு ஏற்படாமல் நிரந்தர தீர்வு காணும் வகையில் கரைகள் பலவீனமாக உள்ள பகுதிகளில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

பொன்னேரி:

பொன்னேரி பகுதியில் ஆரணி ஆற்றின் கரையில் கடந்த ஆண்டு கனமழையினால் உடைப்பு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது.

இதனை சிறப்பு அதிகாரி மோகனசுந்தரம், சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், வட்டாட்சியர் செல்வகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெற்றிவேலன் மற்றும் அதிகாரிகள் பெரும்பேடு குப்பம்ரெட்டிபாளையம், சோமஞ்சேரி, வஞ்சிவாக்கம், ஆண்டார் மடம் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், மழையினால் ஆங்காங்கே ஆற்றின் கரை பகுதி கரைந்து காணப்பட்டுள்ளதால் அதனை மணல் மூட்டைகளை அடுக்கி பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டனர்.

கரை உடைப்பு ஏற்படாமல் நிரந்தர தீர்வு காணும் வகையில் கரைகள் பலவீனமாக உள்ள பகுதிகளில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டு ஆரணி ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க பொதுப்பணித் துறையின் மூலம் 20 ஆயிரம் மணல் மூட்டைகள் தயாராக இருப்பதாகவும் மீஞ்சூர் ஒன்றியத்தின் மூலம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Similar News