உள்ளூர் செய்திகள்

வருவாய்த்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்- திருத்தணியில் தாசில்தார் தலைமையில் போராட்டம்

Published On 2022-07-02 14:36 IST   |   Update On 2022-07-02 14:36:00 IST
  • திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
  • திருவள்ளூர் மாவட்ட பொருளாளரும், திருத்தணி தாசில்தாருமான வெண்ணிலா தலைமையில், 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

திருத்தணி:

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ராஜாநகரம் கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.கே.பேட்டை தாசில்தார் தமயந்தி, ஆர்.கே.பேட்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்களை ராஜா நகரம் கிராமத்தில் சிலர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்ட பொருளாளரும், திருத்தணி தாசில்தாருமான வெண்ணிலா தலைமையில், 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது வருவாய்த்துறை அலுவலர்களை தாக்கிய மர்மநபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Similar News