உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தாட்கோ திட்டங்களில் கடன்பெற இணையதளம் வழியாக விண்ணப்பம்

Published On 2022-06-08 12:48 IST   |   Update On 2022-06-08 12:48:00 IST
  • தமிழக அரசு ஆதிதிராவிடர், பழங்குடி இன மக்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
  • இணையதள முகவரியில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

திண்டுக்கல் :

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் (ம)பழங்குடியினர் நலத்துறை மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடி இன மக்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 1974 முதல் அவர்களது பொருளாதார நிலை உயர்த்தப்பட்டால் தான் சமூக அளவிலான வளர்ச்சி பெரும் என உருவாக்கப்பட்ட அரசு நிறுவனம் ஆதிதிராவிடர் வீட்டுவசதி (ம) மேம்பாட்டுக் கழகம்தான் தாட்கோ.

இத்துறையானது தொழில்முனைவோருக்கான கடன் திட்டம் மூலம் ஏராளமான ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது.

இத்திட்டத்தில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைவரும் பயன்பெறலாம். இத்திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.25 லட்சம் வரை வங்கிகள் மூலமாக கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

மொத்த திட்ட தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2,25,000 வரை முன்விடுவிப்பு மானியம் வழங்கப்படுகிறது. மொத்த திட்ட தொகையில் 5 சதவீதம் பங்குதாரர் விண்ணப்பதாரர் தொகை செலுத்தப்பட வேண்டும். இணையதள முகவரியில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது, இந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர், சாதிச் சான்றிதழ், வருமான சான்று (ரூ.2 லட்சத்திற்குள்), தொழில் செலவினத்திற்கான சரக்கு சேவை - நிறுவன அரசு வணிகத்துறை பதிவெண்ணுடன் கூடிய விலைப்புள்ளி, தாங்கள் தொழிலுக்கான முதலீட்டு தொகை மற்றும் தளவாடங்கள் கடை, கால்நடை, கோழி, மீன் பண்ணை அமைக்கப்படும் செலவினங்கள, நிகர லாபம், வங்கிகளுக்கு மாதம் தோறும் செலுத்த வேண்டிய உத்தேச தொகை மற்றும் தொழில் வாய்ப்புக்கான ஆதாரங்களுடன் கூடிய திட்ட அறிக்கை தயார் செய்து, 5 வருட கடை, நிறுவன வாடகை ஒப்பந்த ஆவணம், அனுபவம் இவற்றுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வயதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் புகைப்படம், இவற்றுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News