உள்ளூர் செய்திகள்

புலிநடமாட்டத்தை கண்காணிக்க 2 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள்

Published On 2022-10-09 10:13 GMT   |   Update On 2022-10-09 10:13 GMT
  • புலி நடமாட்டமும் உள்ளதால் அச்சம் மேலும் அதிகரித்து உள்ளது.
  • 2 இடங்கிளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஊட்டி

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுண்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது.

இந்த இடம் புதர்கள் மண்டி வனப்பகுதி போல் காணப்படுவதால் இங்கு புலி மற்றும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு நாய்களை சிறுத்தை வேட்டையாடி உள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தற்போது புலிநடமா ட்டமும் உள்ளதால் அச்சம் மேலும் அதிகரித்து உள்ளது.

எனவே வனத்துறை கண்காணிப்பில் ஈடுபட்டு அப்பகுதியில் உள்ள புதர்களை அகற்ற நடவ–டிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் கோரிக்கை விடுத்துள்ளார்.அதன்பேரில் ஸ்ரீமதுரை செமுண்டி பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் அபகுதியில் ஆய்வு செய்து 2 இடங்கிளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News