தங்க ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகன் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்தார்.
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சூரசம்கார விழா
- நேற்று வேல் நெடுங்கன்னியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. சிக்கலில் வேல்வாங்கி திருசெந்தூரில் சம்ஹாரம் செய்தார் முருகன் என்று கந்தபுராண த்தில் கூறப்பட்டுள்ள வரலாறாகும்.
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று வேல்நெடுங்கன்னியிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
தங்க ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளியதை தொடர்ந்து சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகன் சூரபத்மன் தலையை , வெட்ட வெட்ட முளைக்கும் தலைகளை சூரசம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் தொடர்ந்து முருகப்பெரு மானுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.