உள்ளூர் செய்திகள்

சுமங்கலி பூஜையில் கலந்து கொண்ட பெண்களை படத்தில் காணலாம்.

வரலெட்சுமி விரதத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் சுமங்கலி பூஜை-1008 பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு

Published On 2023-08-25 09:16 GMT   |   Update On 2023-08-25 09:16 GMT
  • நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
  • சுமங்கலிப் பெண்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த கலசத்திற்கு அா்ச்சனை செய்து சுமங்கலி பூஜை வழிபாடு நடத்தினர்.

நெல்லை:

பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு நிகழ்ச்சியாக வரலெட்சுமி விரதத்தை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபத்தில், இன்று 1008 சுமங்கலி பூஜை நடைபெற்றது. பெண்கள் மாங்கல்ய பலன் அமையவும், குழந்தை பேறு கிடைக்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும், இல்லங்களில் சுபகாரியம் நடைபெறவும் வரலெட்சுமி பூஜை நடைபெற்றது.

ஆயிரங்கால் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருள சுவாமி -அம்பா ளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடா்ந்து சுமங்கலிப் பெண்கள் முன்பு வைக்கப்ப ட்டிருந்த கலசத்திற்கு அா்ச்சனை செய்து சுமங்கலி பூஜை வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சியில் ஆயிரக்க ணக்கான பெண்கள் கலந்து கொண்டு புதிய மஞ்சள் கயிறு அணிவித்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் உடன் வழிபாடு நடத்தினர்.

Tags:    

Similar News