உள்ளூர் செய்திகள்
ஊதிய உயர்வு வழங்க கோரி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய வழங்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
- ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழக அரசு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு இரட்டை ஊதியம் வழங்கப்படுவதாகவும் அதை மாற்றி ஒரே விதமாக ஊதிய வழங்கக் கோரியும், 37 வருடங்களாக தினக்கூலியாக வேலை செய்யும் தொழிலாளர்களை நிரந்தர பணி வழங்க கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு உடனடியாக சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய வழங்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மேலும் கலையரசன், முருகன், முருகன், மாது, மாதேஷ், சக்திவேல், முருகன், நாகராஜ் மற்றும் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.