உள்ளூர் செய்திகள்

வடுகபாளையத்தில்சாலையின் நடுவே திடீர் பள்ளம்

Published On 2022-11-03 15:06 IST   |   Update On 2022-11-03 15:06:00 IST
  • தார் சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது
  • பள்ளத்தில் நீர் தேங்கி விடுவதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகனங்கள் சாலையின் ஓரங்களில் செல்கின்றனர்.

அன்னூர்,

கோவை அன்னூர் அடுத்த நாராயணபுரம் ஊராட்சிக்குட்பட்ட வடுகபாளையத்தில் தார் சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த தார்சாலையானது குரும்பபாளையத்தில் இருந்து வாகார பாளையத்திற்கு செல்லும் வழியாகும். இந்த சாலையில் தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

இந்த சாலையின் நடுவே இருக்கும் பள்ளத்தில் நீர் தேங்கி விடுவதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகனங்கள் சாலையின் ஓரங்களில் செல்கின்றனர். இந்தக் குழியின் இருபுறங்களிலும் மக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் கடைகள் இருப்பதினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த தார் சாலையின் பள்ளத்திலிருந்து வெளியே வரும் நீரினால் அந்த பகுதி சாக்கடை போல காட்சியளிக்கிறது.மேலும் இதன் வழியாக நடைபாதையில் நடக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதுகுறித்து வடுகபாளையம் கிராம மக்கள் நாராயணபுரம் ஊராட்சி தலைவரிடம் பலமுறை தகவல் கொடுத்தும் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ, சாலையை சீரமைத்து தருவதாக எந்த ஒரு வாக்குறுதியும் தரவில்லை என மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News