உள்ளூர் செய்திகள்

திருமுல்லைவாயலில் ஏ.டி.எம் மையத்தில் திடீர் தீ விபத்து

Published On 2022-08-04 12:26 IST   |   Update On 2022-08-04 12:26:00 IST
  • ஏ.டி.எம். மையத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியே வந்தது.
  • தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதால் ஏ.டி.எம். எந்திரம் தீயில் சிக்காமல் அதில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது.

திருநின்றவூர்:

திருமுல்லைவாயல் அடுத்த அண்ணனூர் சிவசக்தி நகர் மெயின் ரோட்டில் ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று காலை 5 மணியளவில் ஏ.டி.எம். மையத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியே வந்தது.

சிறிது நேரத்தில தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கட்டிடத்தின் உரிமையாளர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் திருமுல்லைவாயல் மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர்.

ஆவடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதால் ஏ.டி.எம். எந்திரம் தீயில் சிக்காமல் அதில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது. உயர்மின் அழுத்தம் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News