உள்ளூர் செய்திகள்

வீட்டில் திடீர் தீ விபத்து

Published On 2023-06-18 15:12 IST   |   Update On 2023-06-18 15:12:00 IST
  • திடீரென மாடி வீட்டின் கீழ், பின்பகுதியில் தீப்பிடித்துள்ளது.
  • தீயணைப்பு நிலைய அலுவலர் நாக விஜயன், ராஜா தலைமையிலான தீயணைப்பு குழுவினர், சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஓசூர்,

ஓசூர் அருகே மத்திகிரியில், போலீஸ் நிலையம் பின்புறமுள்ள நேதாஜி நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் வேலன் (53). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இவர், நேற்று மாலை, தனது மனைவியுடன் காரில் பெங்களூரில் ஒரு திருமண விழாவிற்கு சென்றார். வீட்டில் அவரது மகள் சரண்யா என்பவர் மட்டும் இருந்துள்ளார். அப்போது திடீரென மாடி வீட்டின் கீழ், பின்பகுதியில் தீப்பிடித்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சரண்யா உடனடியாக வீட்டில் இருந்து வெளியேறி, தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.

மேலும் ஓசூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் நாக விஜயன், ராஜா தலைமையிலான தீயணைப்பு குழுவினர், சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதில் ரொக்கப்பணம், தங்க நகைகள், ஆவணங்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  

Tags:    

Similar News