உள்ளூர் செய்திகள்
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம்.
சேலத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்
- உடல்நிலை சரியில்லாத நிலையில் செல்வம் மருத்துவ விடுப்பில் இருந்தார்.
- சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீலநாயக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (58). இவர் சேலம் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சேலம் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத நிலையில் செல்வம் மருத்துவ விடுப்பில் இருந்தார். மேலும் சீல நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீலநாயக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது.