உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கறவை மாடு வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன்

Published On 2022-10-16 15:22 IST   |   Update On 2022-10-16 15:22:00 IST
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கறவை மாடு வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2022 - 2023 ஆண்டு தாட்கோ மூலம் பெருமளவில் விவசாய தொழில் புரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை பொருளாதாரத்தில் தற்சார்புஉடையவர்களாக மாற்றிடும் வகையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கறவை மாடு வாங்க ரூ.1.50 லட்சம் திட்டத்தொகையில் 30 சதவீதம் அதாவது ரூ.45 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட உள்ளது.

மேலும் தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கறவை மாடு வாங்க நிர்ணயிக்கப்பட்ட திட்டத்தொகை ரூ. 1.50 லட்சத்தில் 30 சதவீதம்அதாவது ரூ.45 ஆயிரத்து மானிய தொகையும் மீதமுள்ள தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினராக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்திற்குஇதுவரை மானியம் பெற்றிருக்கக் கூடாது.

இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிப்பவர்கள் ஆதிதிராவிடராக இருப்பின்http://application.tahdco.com மற்றும் பழங்குடியினராக இருப்பின் http://fast.tahdco.com என்றஇணையதள முகவரியில் தொழில் முனைவோர் திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர் புகைப்படம், சாதி சான்றிதழ், வருமானச் சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, மாடு வாங்குபவர்களிடமிருந்து பச்சைத்தாலில் மாடுகளின் நிலையை குறிப்பிட்டு எழுதி வாங்க வேண்டும் மற்றும் கால்நடை மருத்துவரிடம் அறிக்கை ஆகிய சான்றுகளுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இணையதளத்தில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News