உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும்- போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு

Published On 2023-06-15 15:37 IST   |   Update On 2023-06-15 15:37:00 IST
  • சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  • மாடலாக முடிவெட்டி இருந்தால் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறுவோம் என விழிப்புணர்வு செய்தனர்.

சென்னை:

சென்னையில் பள்ளி செல்லும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யாதிருத்தல் மற்றும் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது குறித்து போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர்.

புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில் சாலையில் வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் போலீசார் சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வர வேண்டும். படிக் கட்டில் பயணம் செய்யக் கூடாது. ஸ்டைலாக முடி வைக்க கூடாது. பெற்றோருக்கும், பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் நோக்கில் நன்கு படிக்க வேண்டும்.

உலகில் ஒருவருக்கு பெரிய சொத்து என்பது கல்விதான். எனவே கல்வியை நன்றாக கற்க வேண்டும்.

மாடலாக முடிவெட்டி இருந்தால் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறுவோம் என விழிப்புணர்வு செய்தனர். போலீசாரின் இந்த முயற்சிக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் பாராட்டினர்.

Tags:    

Similar News