உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.

பள்ளி சுவருக்கு வர்ணம் பூசிய மாணவ- மாணவிகள்

Published On 2022-07-18 08:11 GMT   |   Update On 2022-07-18 08:11 GMT
  • பள்ளி வளாகத்தை தூய்மை செய்து 350 மீட்டர் நீளமுள்ள பள்ளியின் சுற்றுச்சுவருக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து வர்ணம் பூசினர்.
  • பள்ளியில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறையில் தற்போது படிக்கும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம்வேதார ண்யம் அடுத்த பஞ்சநதி க்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணி நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தை தூய்மை செய்து 350 மீட்டர் நீளமுள்ள பள்ளியின் சுற்றுச்சுவருக்கு மாணவ -மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து நிதி சேர்த்து ரூ.25000 செலவு செய்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து வர்ணம் பூசினர்.இதை அறிந்த இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளியை நேசித்து தூய்மை பணி மேற்கொண்ட மாணவ ர்களுக்கும் பொற்றோ ர்களுக்கும் விருந்து வைக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் முரளி தரனை அணுகி அனுமதி பெற்று 500 நபர்களுக்கு பள்ளி வளாகத்தில்ஆறு சுவை உணவு விருந்து அளித்தனர்.பள்ளியில் முன்னாள் மாணவர்கள்தங்கள் படித்த வகுப்பறையில் தற்போது படிக்கும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர் மகேந்திரன், ஒய்வு பெற்ற இந்திய ராணுவ விரார் தமிழரசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள் ,மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News