உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

Published On 2022-08-23 09:49 GMT   |   Update On 2022-08-23 09:49 GMT
  • தொழில் பிரிவு ஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்யாதவர்களும் 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
  • இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

கூறியிருப்பதாவது :-

2022-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் முதல் கட்ட கலந்தாய்வில் சேர்க்கை முடிந்துள்ளது.

மீதி உள்ள காலியிடங்களில் சேர 2-ம் கட்டமாக கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள் இணையதளம் வாயிலாக வருகிற 25ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

முதல் கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து தொழில் பயிற்சி நிலையம் மற்றும் தொழில் பிரிவு ஒதுக்கீடு பெறாதவர்களும், தொழில் பயிற்சி நிலையம் மற்றும் தொழில் பிரிவு ஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்யாதவர்களும் 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கணினி மையங்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உரிய ஆவணங்களுடன் 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் ஆன்லைன் மூலம் அல்லது கடன் அட்டை வாயிலாக விண்ணப்பக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.

மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு தஞ்சை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர், முதல்வரை 9994043023, 9840950504, 8056451988, 9943130145, 7373935569 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News