உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
- ஆண்டுதோறும் ஜூலை 3-ந்தேதி சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- மாணவ -மாணவிகள் நெகிழிப்பை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர்.
கோத்தகிரி,
ஆண்டுதோறும் ஜூலை 3-ந்தேதி சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக கோத்தகிரி ஐ.சி.எஸ்.பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கோத்தகிரி மார்க்கெட் திடலில் மாணவ -மாணவிகள் பங்கேற்ற நெகிழிப்பை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் உள்ள விக்கி, நாவல், பிளம்ஸ், பேரிக்காய், பிச்சிஸ் ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
கோத்தகிரி ஐ.சி.எஸ். பள்ளி விழிப்புணர்வு பேரணியில் தாளாளர் செந்தில்ரங்கராஜன், முதல்வர் மகேஸ்வரி ரங்கராஜன், கோத்தகிரி பேரூராட்சி தலைவி ஜெயக்குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.