பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள்.
வன உயிரின பாதுகாப்பு விழாவையொட்டி கொடைக்கானலில் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
- கொடைக்கானலில் வன உயிரின வாரவிழா கொண்டாடப்பட்டது.
- அன்னை தெரசா பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் வன உயிரின வாரவிழா கொண்டாடப்பட்டது. கொடைக்கானல் ஏரிச்சாலை முகப்பில் வன உயிரின வார விழாவை சிறப்பிக்கும் வகையில் அன்னை தெரசா பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா தலைமை தாங்கினார்.
கொடைக்கானல் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திக், கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், உதவி வன பாதுகாவலர் சக்திவேல், ரேஞ்சர்கள் சிவக்குமார், செந்தில்குமார், சுரேஷ், முத்துராமலிங்கம், குமரேசன், பாலகிருஷ்ணன், அழகுராஜா மற்றும் சமூக ஆர்வலர்கள் மோகன், வீரா, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள், அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் மற்றும் வனத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். வன உயிரின வார விழா சைக்கிள் பேரணி ஏரி சாலை முழுவதும் சுற்றி நகராட்சி அலுவலகம் வந்தடைந்தது.
சைக்கிள் பேரணியில் வனத்தை பாதுகாப்பது மரம் வளர்ப்பது அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை அணிந்தபடி மாணவிகள் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்திருந்தனர். நாளை (8ந் தேதி) வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, பைன்பாரஸ்ட், ேமாயர்பாய்ண்ட், தூண்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் ெதாடங்கி உள்ளனர். சுற்றுலா தலங்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் உற்சாகம் அடைந்துள்ளனர்.