உள்ளூர் செய்திகள்

ஒன்றியகுழு கூட்டம் நடைபெற்ற காட்சி.

தாரமங்கலம் ஒன்றியத்தில் இருந்து 3 ஊராட்சிகளை பிரிக்க கடும் எதிர்ப்பு

Published On 2022-12-30 08:05 GMT   |   Update On 2022-12-30 08:05 GMT
  • தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது.
  • கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனிவாசன் துட்டம்பட்டி ஊராட்சியில் 1 ஏக்கர் பரப்பளவில் வனத்துறை சார்பில் மரகத பூஞ்சோலை அமைக்க அனுமதி வழங்கியதற்கு பாராட்டு தெரிவித்து பேசினார்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சுமதிபாபு தலைமை தாங்கினார். ஆணை யாளர்கள் விஜயலட்சுமி, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனிவாசன் துட்டம்பட்டி ஊராட்சியில் 1 ஏக்கர் பரப்பளவில் வனத்துறை சார்பில் மரகத பூஞ்சோலை அமைக்க அனுமதி வழங்கியதற்கு பாராட்டு தெரிவித்து பேசினார்.

அதனை தொடர்ந்து பேசிய தலைவர் சுமதிபாபு, பல்வேறு ஊராட்சிகளில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடாக பயனாளிகள் பட்டியல் சேர்க்கபட்டு பணி நடை பெறுவதாக குற்றம் சாட்டி னார். அதற்கு பதில் அளித்து பேசிய ஆணையாளர் ரவிச்சந்திரன் ஊராக வேலை திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கை குறித்து கண்டறியபட்டால் சம்பந்தபட்ட ஊராட்சி நிவாகத்தின் மீதும், பணித்தள பொறுப்பாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய தலைவர் சுமதிபாபு, துறை சார்ந்த அதிகாரிகள் பெரும்பாலானோர் கூட்டத்திற்கு வருவது இல்லை. இதனால் துறை சார்ந்த விளக்கம் கேட்டு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும், அனைவரும் ஒன்றிய குழு கூட்டத்திற்கு தவறா மல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து கூட்டதில் சேலம் மேற்கு சட்ட மன்ற உறுப்பினர் கோரிக்கை யின் படி தாரமங்கலம் ஊராட்சி யில் உள்ள அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கோண கப்பாடி ஆகிய ஊரட்சி களை பிரித்து ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள 8 ஊரட்சிகளை பிரித்து முத்துநாயக்கன்பட்டியை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அனுமதி கூடாது என்று ஊராட்சி கவுன்சி லர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் நிராக ரிக்கப்பட்டது.

Tags:    

Similar News