உள்ளூர் செய்திகள்

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

Published On 2022-10-08 09:42 GMT   |   Update On 2022-10-08 09:42 GMT
  • உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன் படி சட்ட நடவடிக்கை
  • கூட்டுறவு கடன் சங்கங்களின் உரிமங்கள் ரத்து

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லரை விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மற்றும் உரங்களுடன் சேர்த்து பிற பொருள்களை கட்டாயப்படுத்தி விவசாயி களுக்கு வழங்கும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன் படி சட்ட நடவடிக்கை தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

உரங்களின் அதிகபட்ச விற்பனை விலை மற்றும் இருப்பு விவரங்களை விலைப்பலகையில் தெளிவாக எழுதி கடையின் முன் விவசாயிகளுக்கு தெரியும்படி வைக்க வேண்டும். உரம் வாங்கும் விவசாயிகளுக்கு விற்பனை முனைய கருவி ரசீது வழங்குவதுடன், அனைத்து உர பரிவர்த்தனைகளையும் விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்யவேண்டும்.

உரிமத்தில் உர கொள்முதல் நிறுவனங்களின் "O" படிவங்களை இணைத்து அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டும் உரங்களை கொள்முதல் செய்வது, உரிமத்தில் அனு மதி பெற்ற இடங்களில் மட்டும் உரங்களை இருப்பு வைத்திருப்பது மற்றும் உரங்களை பதுக்கி வைக்காமல் இருப்பது ஆகியவனற்றை தவறாமல் பின்பற்ற சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லரை மற்றும் மொத்த உரவிற்பனையாளர்களுக்கும்அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News