உள்ளூர் செய்திகள்

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உரிமம் இன்றி காய்கறி நாற்றுகள் விற்றால் கடும் நடவடிக்கை- துணை இயக்குனர் எச்சரிக்கை

Published On 2023-08-06 09:15 GMT   |   Update On 2023-08-06 09:15 GMT
  • நாற்றங்கால்கள் உரிமம் பெறாமல் நாற்றுகளை விற்பனை செய்யக் கூடாது.
  • நாற்றுகள் வாங்குபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பண்ணைகளில் வாங்கி பயனடையலாம்.

நெல்லை:

நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983, பிரிவு 3-ன் படி காய்கறி நாற்றுகள் விற்பனை செய்யும் நாற்றங்கால்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நாற்றங்கால்கள் உரிமம் பெறாமல் நாற்றுகளை விற்பனை செய்யக் கூடாது.

தென்காசி மாவட்டத்தில் நாற்று பண்ணைகளில் காய்கறி செடிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உரிமம் பெறாமல் நாற்று பண்ணை அமைத்துள்ள வர்கள் மற்றும் அமைக்க இருப்பவர்கள் விற்பனை உரிமம் பெற விண்ணப்ப படிவம் 'அ'வில் இரு நகல் களில் பூர்த்தி செய்து ரூ. 1000-க்கு உரிய கணக்கில் இணையதளம் மூலம் செலுத்தி தேவையான ஆவணங்களுடன் நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டு நாற்றுப் பண்ணை அமைந்துள்ள பகுதி கட்டிட வரைபடம், சொந்த இடமாக இருந்தால் சொத்து வரிரசீது நகல், வாடகை இடமாக இருந்தால் ஒப்பந்தபத்திரம், அதன் நிலவரி ரசீது, ஆதார் கார்டு நகல், 3 பாஸ்போர்ட் புகைப் படம் ஆகியவற்றுடன் விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். காய்கறி நாற்றுகள் வாங்குபவர்கள் அங்கீகரி க்கப்பட்ட நாற்று பண்ணைகளில் மட்டும் வாங்கி பயனடையலாம். உரிமம் பெறாத நாற்று பண்ணைகளில் நாற்றுக்களை வாங்கி ஏமாற வேண்டாம்.

உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் நாற்று பண்ணை உரிமையாளர்கள் மீது விதைக் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் படி நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News