உள்ளூர் செய்திகள்

செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை

Published On 2022-08-19 07:52 GMT   |   Update On 2022-08-19 07:52 GMT
  • செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள்மீது கடுமையானநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்துகளை தடுக்கும் வகையில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஆகியவைகள் பல்வேறு நடவடிக்கைக ள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம்அணியாமல் செல்லுதல், 4 சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல், முக்கியமாக கைப்பேசியில் பேசிக்கொண்டே இரண்டு சக்கர மற்றும் 4 சக்கர வாகனத்தை இயக்குவது பெரும்பாலான விபத்து க்களுக்கு காரணமாக அமைகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் கைப்பேசியில் பேசிக்கொண்டு இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும்4 சக்கர வாகனங்களில் வாகன ஓட்டுநர் மட்டுமின்றி வாகனத்தில் பயணம் செய்பவர்களும் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை உணர்ந்து, சீட் பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள்மீது கடுமையானநடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்படி போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News