உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வலைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

Published On 2022-07-21 07:20 GMT   |   Update On 2022-07-21 07:21 GMT
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வலைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.
  • காவல்துறை மீது களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலோ பரப்பிவருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் இறந்துபோனது சம்மந்தமாக இறந்து போன மாணவியின் தந்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்வது போன்ற வீடியோ காட்சி சமூகவளைதளத்தில் பரவிவருகிறது. இது சம்மந்தமாக விசாரணை செய்த போது இந்த வீடியோ நாகப்படினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் காவல் சரகம் பெருநாட்டான்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் குடும்பத்தினருக்கும் அவரது பக்கத்து வீடான முனுசாமி என்பவர் குடும்பத்தினருக்கும் வேலி பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதில் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டுள்ளது. இந்நிலையில் 14.07.2022-ந் தேதி தேவேந்திரன் என்பவர் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென தீக்குளிக்க முயற்சித்தார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த வீடியோ என்று தெரியவருகிறது . இந்த சம்பவத்தை வேறு விதமாக திசைதிருப்பி கனியாமூர் சக்தி பள்ளியில் இறந்து போன மாணவி ஸ்ரீமதியின் தந்தை நீதி கேட்டு தீக்குளிக்க முயற்சி செய்வது போன்று பொய்யான செய்தியை, மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உறுவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது காவல்துறை மீது களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலோ பரப்பிவருகின்றனர். இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

Tags:    

Similar News