உள்ளூர் செய்திகள்

நாகை துறைமுகத்தில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

Published On 2023-11-17 09:46 GMT   |   Update On 2023-11-17 09:46 GMT
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்தது.
  • 9 துறைமுகங்களில் 2-k; எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்:

மத்திய மேற்கு வங்கக் கடலில், விசாகப்பட்டனத்திற்கு தென்கிழக்கே சுமார் 220 கி.மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்தது.

எனவே, தொலை தூரத்தில் புயல் சின்னம் உருவாகி இருப்பதை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில், நாகை துறைமுக அலுவலகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்பொழுது 9 துறைமுகங்களில் தற்போது இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் உருவாகிய உள்ளது என்பதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Tags:    

Similar News