உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான கோ-கோ போட்டி: 2-ம் இடம் பிடித்த கிருஷ்ணகிரி அரசு மகளிர் பள்ளி அணிக்கு பாராட்டு

Published On 2022-07-30 15:37 IST   |   Update On 2022-07-30 15:37:00 IST
  • மாநிலம் முழுவதும் இருந்து 11 அணிகள் கலந்து கொண்டன.
  • மாணவிகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

திருச்சி கோ-கோ அசோசியேசன் சார்பில், மாநில அளவிலான கோ-கோ போட்டிகள் திருச்சியில் நடந்தது. மாநிலம் முழுவதும் இருந்து 11 அணிகள் கலந்து கொண்டன. இதில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் கலந்து கொண்ட அணியினர், மாநில அளவில் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றனர்.

இவர்களுக்கான பாராட்டு விழா கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவில் பங்கேற்றவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சி தலைவர் பரிதா நவாப் பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்று, பள்ளிக்கும், மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவிகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார். மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மகேஸ்வரி வெற்றி பெற்ற அணி மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் பன்னாட்டு அளவிலான கோ-கோ போட்டி, வருகிற ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை இந்தியா - நேபாள் அணிகளுக்கு இடையில், நேபாளில் நடக்க உள்ளது. இந்த போட்டியில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 15 மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சியும் நடந்தது. நகர்மன்றத்தலைவர் பரிதா நவாப், நேபாளில் பங்கேற்கும் கோ-கோ அணியைப் பாராட்டி ஊக்கத்தொகையாக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.15 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாஸ்கரன், தலைமை ஆசிரியர் மகேந்திரன், மற்றும் கவுன்சிலர்கள் செந்தில்குமார், சுனில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News