உள்ளூர் செய்திகள்

விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டார்.



வக்கம்பட்டி புனித மரிய மதலேனால் தேவாலய ஆடி பெருவிழா

Published On 2023-07-24 10:49 IST   |   Update On 2023-07-24 10:49:00 IST
  • 22ம் தேதி காலை தேரடி திருவிழா, மாலையில் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு மின் ரத தேர் பவனி நடைபெற்றது.
  • திருவிழாவிற்கு வந்த அமைச்சர் இ.பெரியசாமிக்கு விழா கமிட்டி சார்பாக உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செம்பட்டி:

திண்டுக்கல் அருகே வக்கம்பட்டியில் புனித மரிய மதலேனால் ஆலய 168 ஆம் ஆண்டு ஆடி பெருவிழா நடைபெற்றது. 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் 19, 20ம் தேதிகளில் திருப்பலியும், 21ம் தேதி ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் நடைபெற்றது. 22ம் தேதி காலை தேரடி திருவிழா, மாலையில் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு மின் ரத தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

திருவிழாவிற்கு வந்த அமைச்சர் இ.பெரியசாமிக்கு விழா கமிட்டி சார்பாக உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தேவாலயத்திற்கு சென்ற அமைச்சரை பங்குத்தந்தை சேவியர்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார். அங்கு பேசிய அமைச்சர் தமிழகத்தில் தொடர்ந்து சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது தி.மு.க. அரசு மட்டும் தான். தேவாலயம் முன்பு உள்ள மைதானத்திற்கு பேவர் பிளாக் கற்கள் சாலையும், ஹை மாஸ் விளக்கும் கேட்டுள்ளனர். உடனடியாக உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார்.

விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News