உள்ளூர் செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு

Published On 2023-05-19 10:12 IST   |   Update On 2023-05-19 12:33:00 IST
  • தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
  • பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

சென்னை:

2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள்  www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in  என்ற இணையதளங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

அந்தந்தப் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

Tags:    

Similar News