உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரியில் விளையாட்டு விழா

Published On 2023-08-25 09:50 GMT   |   Update On 2023-08-25 09:50 GMT
  • உடற்கல்வி இயக்குநர் சேவியர் டெனிஸ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.
  • மாணவ, மாணவிகளுக்கான தொடர் ஓட்டம் மற்றும் பேராசிரியர் களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

தருமபுரி,

தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரியில் 15-ஆம் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்குக் கல்லூரிச் செயலர் ராபர்ட் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். முதல்வர் ஆஞ்சலோ ஜோசப் முன்னிலை வகித்து வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக சலேசிய குருத்துவ வாழ்வில் வெள்ளி விழா காண்பவரும், இக்கல்லூரியின் முதல் தாளாளரும், பன்னூர், தொன் போஸ்கோ பள்ளியின் இன்றைய தாளாளருமான ஜான்சன் அந்தோணிசாமி கலந்துகொண்டு, கொடியேற்றி விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அவர் பேசுகையில், மாணவ, மாணவியர் கற்கும் கல்வியோடு உடலினை உறுதி செய்யும் விளையாட்டிலும், தம் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியும் என்று அறிவுறுத்தினார்.

கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் சேவியர் டெனிஸ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கான தொடர் ஓட்டம் மற்றும் பேராசிரியர் களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

விழாவில் கல்லூரித் துணை முதல்வர் முனைவர் பாரதி பெர்னாட்ஷா வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை அறிவித்து நிறைவுரையாற்றினார். மாணவ, மாணவியரின் விளையாட்டுத் திறன்களை வளர்க்கும் விதத்தில் அமைந்த இவ்விழாவில் கல்லூரிப் பொருளாளர் அந்தோணி பாப்புராஜ், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் ஆனந்த், கணினி அச்சுக்கலைத் துறைத் தலைவர் ராம்குமார் ஆகியோர் தலைமையில் துறைப் பேராசிரியர்கள் இணைந்து இந்நிகழ்விற்கான ஏற்பாடு களைச் செய்திருந்தனர்.

மா ணவ, மாணவியருக்கு உடல் உறுதியினையும், உற்சாகத்தையும் அளிப்பதாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

Tags:    

Similar News