உள்ளூர் செய்திகள்

குன்னூரில் கெட்டுப்போன மீன், கோழி இறைச்சி பறிமுதல்

Published On 2023-09-23 14:43 IST   |   Update On 2023-09-23 14:43:00 IST
  • கடை உரிமையாளர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதித்தனர்
  • காலாவதியான இறைச்சி பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்

அருவங்காடு,

குன்னூர் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் ஓட்டல்கள், பாஸ்ட்புட் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் தலைமை யிலான அதிகாரிகள் குன்னூரில் உள்ள பஸ் நிலையம், மார்க்கெட் பகுதி, பெட்போர்டு ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல், பாஸ்ட்புட் கடை, ஷவர்மா கடைகளில் ஆய்வு நடத்தினர்.

இதில் கலப்பட தேயிலை தூள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள், கெட்டுப் போன மீன், கோழி இறைச்சி, தடை செய்யபட்ட பாலிதீன் பைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதித்தனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். இச்சம்பவம் குன்னூர் மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது

Tags:    

Similar News