போட்டியை கல்லூரி முதல்வர் காமராஜர் தொடங்கி வைத்து பேசினார்.
அரசு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு பேட்டி
- முன்னதாக தமிழ்த்துறை தலைவர் குமரேசமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
- வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சி துறை, தமிழ் மாணவர் மன்றம் மூலம் பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் காமராஜ் தலைமை தாங்கினார்.
முன்னதாக தமிழ்த்துறை தலைவர் குமரேசமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
போட்டிகளுக்கு நடுவர்களாக தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தெட்சணமூர்த்தி, அம்பிகாபதி, தமிழ் துறை பேராசிரியர் மாதவன், பேராசிரியர் பிரபாகரன் மாரிமுத்து, இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும் என தமிழ்துறை பேராசிரியர் குமரேசமூர்த்தி தெரிவித்தார்.
முடிவில் பேராசிரியர் ராஜா நன்றி கூறினார்.