உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் முைளப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்த பெண்கள்.

கூடலூரில் கோவில் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்

Published On 2023-09-28 05:16 GMT   |   Update On 2023-09-28 05:16 GMT
  • கூடலூர் கிழக்கு முத்தாலம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் .
  • பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாலை முளைப்பாரி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது

கூடலூர்:

கூடலூர் கிழக்கு முத்தாலம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் . அதன்படி நேற்று கோவில் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது . இதையொட்டி அதிகாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். அதனைத் தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

மேலும் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாலை முளைப்பாரி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அத்துடன் பக்தர்கள் சிவன், முருகன், விநாயகர், கலைமகள், லட்சுமி , காளி தேவி உள்பட கடவுள் வேடம் அணிந்து டிராக்டர் வண்டிகளில் வந்தனர்.

மேலும் தப்பாட்டம், தேவராட்டம் , கேரள செண்டை மேளம் , பேண்டு வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கூடலூர் ஒக்கலிகர் (காப்பு) மகாஜன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News