உள்ளூர் செய்திகள்

நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சிறப்பு ரெயில் இயக்கம்

Published On 2023-06-18 10:00 GMT   |   Update On 2023-06-18 10:00 GMT
21-ந் தேதி காலை 8.15 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரெயில் புறப்படும்.

தஞ்சாவூர்:

நாகை மாவட்டத்தில் சிக்கல் சிங்காரவேலர் கோவில், வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் தர்கா ஆகிய புகழ் பெற்ற மூன்று வழிபாட்டுத் தலங்களும் மும்ம தத்திற்கான அடையா ளமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது.

இந்த வழிபாட்டு தலங்களின் விழாக்களின் போது வழக்கத்தை விட கூடுதலான அளவு பக்தர்கள் கலந்து கொள்வர். இதற்காக சிறப்பு பஸ், ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.அந்த வகையில் நாகூர் தர்கா ( சின்ன ஆண்டகை ) கந்தூரி விழாவானது நாளை தொடங்கி வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சி 21ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதாவது 21-ந் தேதி காலை 8.15 மணி அளவில் சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம் ,கடலூர், சிதம்பரம் ,சீர்காழி ,மயிலாடுதுறை, திருவாரூர் , நாகப்பட்டினம் வழியாக நாகூருக்கு மாலை 3.30 மணிக்கு வந்தடைகிறது. அதே ரெயில் காரைக்காலுக்கு மாலை 3.50 மணிக்கு சென்று அடைகிறது.இந்த ரெயிலானது மறு மார்க்கமாக மீண்டும் 22-ந் தேதி காலை 6 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு 6.20 மணிக்கு நாகூர் வந்து மதியம் 1.30 மணி அளவில் தாம்பரம் சென்று அடைகிறது.

மேற்கண்ட தகவலை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

Tags:    

Similar News