உள்ளூர் செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் சவுரிராஜ பெருமாள்.
சவுரிராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
- 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும்.
- புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலகளில் இருந்தும் வருகை தந்து தரிசனம் செய்வர்.
இந்நிலையில் புரட்டாசி மாதம் சனிக்கிழமையான நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்ட உடன் கோவிந்தா கோபாலா என கோஷங்கள் எழுப்பியபடியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.