உள்ளூர் செய்திகள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2022-07-29 08:44 GMT   |   Update On 2022-07-29 08:44 GMT
  • ஆடி அமாவாசையை முன்னிட்டு ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ராசிபுரம்:

ராசிபுரத்தில் உள்ள நாமக்கல் சாலையில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.

இங்கு ஆடி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர் உள்பட 11 பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து 21 ஆயிரம் வெற்றிலைகளைக் கொண்டு, மாரியம்மனுக்கு வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டது.

இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே மாலை நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் கோவில் வளாகம் இருண்டு காணப்பட்டது.

அதனால் பக்தர்கள் இருட்டில் நின்றபடி சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். அதை தவிர்க்க விஷேச நாட்களில் மின்தடை ஏற்பட்டாலும், கோவிலில் ஜெனரேட்டர் மூலம் மின்விளக்குகள் எரிய இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News