உள்ளூர் செய்திகள்

நெல்லை கோர்ட்டில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கிற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது

Published On 2023-03-09 15:01 IST   |   Update On 2023-03-09 15:01:00 IST
  • நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் நெல்லை மற்றும் 9 தாலுகாவில் நடத்தப்பட உள்ளது.
  • சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை நெல்லை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குமரகுரு தொடங்கி வைக்க உள்ளார்.

நெல்லை:

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பு நீதிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2023-ம் ஆண்டில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கிற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் வருகிற 11-ந்தேதி (சனிக் கிழமை) நடத்த சென்னை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டின் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கிற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் வருகிற 11-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் நெல்லை மற்றும் 9 தாலுகாவில் நடத்தப்பட உள்ளது.

இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்து கொள்ளப்படு கின்றன.

மேலும் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத் தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் வருகிற 11-ந்தேதி காலை 10 மணிக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கிற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை நெல்லை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குமரகுரு தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்துமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News