உள்ளூர் செய்திகள்

முகாமை பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்த காட்சி.

பாலக்கோட்டில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2023-08-20 14:54 IST   |   Update On 2023-08-20 14:54:00 IST
  • முகாமிற்கு பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
  • 192 தூய்மை பணியாளர்களுக்கு மார்பக புற்றுநோய், பி.பி. சுகர், இ.சி.ஜி, கர்ப்பபை நோய் போன்ற பிரச்சனைகள் குறித்து மருத்துவ பரி சோதனைகள் நடை பெற்றது.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி மற்றும் அரசு மருத்துமனை சார்பில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பாலக்கோடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்றது.

முகாமிற்கு பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாரண்டஅள்ளி பேருராட்சி தலைவர் வெங்கடேஷன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்ட அள்ளி, பாப்பாரப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் பணிபுரியும் 192 தூய்மை பணியாளர்களுக்கு மார்பக புற்றுநோய், பி.பி. சுகர், இ.சி.ஜி, கர்ப்பபை நோய் போன்ற பிரச்சனைகள் குறித்து மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.

முகாமில் பாலக்கோடு அரசு தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி, செவிலியர்கள், மருத்துவர்கள், பேரூராட்சியின் செயல் அலுவலர்கள் டார்த்தி, கோமதி, ஆயிஷா மற்றும் தூய்மை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News