உள்ளூர் செய்திகள்

கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்தபடம். அருகில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் பலர் உள்ளனர்.

நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் - ரூ.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

Published On 2023-09-02 14:56 IST   |   Update On 2023-09-02 14:56:00 IST
  • பழைய பேட்டை மாநகராட்சி பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
  • தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லையை அடுத்த பழைய பேட்டை மாநகராட்சி பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி யின் நூற்றாண்டு விழா வினை முன்னிட்டு மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அவர்களுக்கு சர்க்கரை அளவு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் மாற்றுத்திறனா ளிகள் பயன்படுத்தும் விதமாக மூன்று சக்கர ஸ்கூட்டர்கள், நிதியுதவி உள்ளிட்ட ரூ.30 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி கமிஷனர் வெங்கட் ராமன், மண்டல தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர் உலகநாதன், சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News