உள்ளூர் செய்திகள்

புகார் மீதான சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருப்பனந்தாளில் புகார்கள் மீதான சிறப்பு முகாம்

Published On 2023-10-19 15:01 IST   |   Update On 2023-10-19 15:01:00 IST
  • வழக்கு சம்பந்தமான 100-க்கும் மேற்பட்ட புகார்கள் விசாரணைக்காக நிலுவையில் இருந்தன.
  • இன்ஸ்பெக்டர்கள் ஷர்மிளா, பாலசந்திரன், மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்:

திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள், சோழபுரம், பந்தநல்லூர், ஆகிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழக்கு சம்பந்தமான 100-க்கும் மேற்பட்ட புகார்கள் விசாரணைக்காக நிலுவையில் இருந்தன.

அவற்றை விசாரித்து உடனடி தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில்,போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவுபடி புகார்கள் மீதான சிறப்பு முகாம் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் திருப்பனந்தாள் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் இன்ஸ்பெக்டர்கள் ஷர்மிளா, பாலசந்திரன், மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் குடும்ப பிரச்சினை, கொடுக்கல் வாங்கல் பிரச்சினை, வாய் தகராறு, காதல் பிரச்சினை, சொத்து பிரச்சினை, உள்ளிட்ட 100-க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. 30 மனுக்கள் மீது உடனே விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News